ரூ.107 சம்பளமாக பெற்ற டிவிட்டர் தலைமை செயல் அதிகாரி

டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டார்ஸி 2019 ஆம் ஆண்டிற்கான அடிப்படை சம்பளமாக 1.40 அமெரிக்க டாலர்களை (ரூ .107-க்கு கூடுதலாக) பெற்றுள்ளார். 
ரூ.107 சம்பளமாக பெற்ற டிவிட்டர் தலைமை செயல் அதிகாரி


டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டார்ஸி 2019 ஆம் ஆண்டிற்கான அடிப்படை சம்பளமாக 1.40 அமெரிக்க டாலர்களை (ரூ.107-க்கு கூடுதலாக) பெற்றுள்ளார். 

உலகயளவில் கரோனா நோய்த்தொற்று நிவாரணத்துக்காக டார்ஸி தனது சொந்த பங்காக 1 பில்லியன் டாலர்களை அளித்துள்ளார்.  

டிவிட்டர் நிறுவனம் புதன்கிழமை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டார்ஸி, சம்பள உயர்வோ, கூடுபதல் வருவாயோ எதுவும் பெறாமல் 2018 ஆம் ஆண்டில் பெற்ற அதே அடிப்படை சம்பளத்தையே 2019 ஆம் ஆண்டிலும் பெற்றுள்ளார். மேலும் 2017 ஆம் ஆண்டும் அவர் எந்த சம்பளத்தையும் பெறவில்லை என குறிப்பிட்டுள்ளது. 

கோடீஸ்வரரான டார்ஸி,  தனது சொந்த பங்காக கரோனா நிவாரணத்துக்காக 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக அளித்துள்ளார். 

டிவிட்டரில் 2017 ஆம் ஆண்டு வரை 140 எழுத்துகள் வரை மட்டுமே பயன்படுத்த முடியும். ஒரு எழுத்துக்கு பத்து செண்ட் வீதம் 140 எழுத்துக்களுக்கு 1.40 டாலர்கள் என்று டார்ஸி பெறுகிறார். தற்போது டிவிட்டரில் 240 எழுத்துக்களுக்கு வரை பயன்படுத்தலாம் என்பதால் அடுத்த ஆண்டு சம்பளமாக 2.80 அமெரிக்க டாலர்களாக டார்ஸி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஃபோர்ப்ஸின் நிகழ நேரப் பணக்காரர்கள் பட்டியலின் படி,  ஜாக் டார்ஸியும் இடம் பெற்றுள்ளார். அவர் மதிப்பு 3.9. பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. 

இதுவரை பல நிறுவனங்களுக்கு 40 மில்லியன் டாலர் மானியமாக நிதி அளித்துள்ளதாக டார்ஸி கூறியுள்ளார். இதில் பெருமாபாலானவை அவர் தான் நிதி அளித்தார் என்பது தெரியாத வகையில் தரப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com