கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட 3 போலீஸாருக்கு கரோனா பாதிப்பு

கோவையில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்த 3 போலீஸாருக்கு கரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார். 
கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட 3 போலீஸாருக்கு கரோனா பாதிப்பு


கோவையில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்த 3 போலீஸாருக்கு கரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார். 

கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளா்கள், போலீஸாா், சுகாதார பணியாளா்களின் பாதுகாப்புக் கருதி அவா்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தமிழக-கேரளா எல்லையான வாளையாறு பகுதியில் ரேபிட் கிட் கருவி மூலம் அங்கு பணியில் இருந்த போலீஸாருக்கு சில நாள்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, கோவை மாநகர தெற்கு காவல் எல்லைகளில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட 75 பேருக்கு போத்தனூா் ரயில் நிலையம் அருகே சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பி.சி.ஆா். கருவி மூலம் வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் முடிவுகள் 48 மணி நேரத்திற்கு பின் தெரிவிக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், கோவையில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்த 3 போலீஸாருக்கு கரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார். 

போத்தனூரை சேர்ந்த 2 பெண் காவலர்கள் மற்றும் ஒரு ஆண் காவலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 காவலர்களும் 7 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் பணிக்கு வந்த நிலையில், தற்போது கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com