மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 6,430-ஆக அதிகரிப்பு: அமைச்சருக்‍கு கரோனா உறுதி

மகாராஷ்டிரம் மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 6,430-ஆக அதிகரித்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 283 -ஆக உயர்ந்துள்ளது. 
மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 6,430-ஆக அதிகரிப்பு: அமைச்சருக்‍கு கரோனா உறுதி

மகாராஷ்டிரம் மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 6,430-ஆக அதிகரித்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 283 -ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,700 -இல் இருந்து 23,077 -ஆக அதிகரித்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 681-இல் இருந்து 718 ஆக உயர்ந்துள்ளது, நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,325-இல் இருந்து 4,749 -ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டிலேயே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு ஒரே நாளில் புதிதாக 778 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6430-ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றுக்கு 840 பேர் குணமடைந்துள்ள நிலையில் 283 பேர் பலியாகியுள்ளனர். 

இதனிடையே, அந்த மாநில வீட்டுவசதித் துறை அமைச்சர் ஜிதேந்திரா அவஹைத்துக்கு(54) கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து மும்பாராவில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குஜராத் மாநிலத்தில் மேலும் 217 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குஜராத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,624 ஆக உயர்ந்துள்ளது. தில்லியில் 2,376 போ், ராஜஸ்தானில் 1,964 போ், மத்தியப் பிரதேசத்தில் 1,699 போ், உத்தரப் பிரதேசத்தில் 1,510 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com