இந்தியாவில் கரோனா பாதிப்பு 26,469-ஆக உயர்வு; பலி 824 -ஆக உயர்வு 

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,942 -இல் இருந்து 26,496 -ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 824-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 
இந்தியாவில் கரோனா பாதிப்பு 26,469-ஆக உயர்வு; பலி 824 -ஆக உயர்வு 


புதுதில்லி: நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,942 -இல் இருந்து 26,496 -ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 824-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 5,804 போ் குணமடைந்து வீடு திரும்பினா். நோய்த்தொற்றுக்கு தற்போது 19,868 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 111 போ் வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில்1,990 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,496-ஆக அதிகரித்துள்ளது, 49 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 824 -ஆக உயர்ந்துள்ளது. 

ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிரத்தில் 323 பேரும், குஜராத்தில் 133 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 99 பேரும், தில்லியில் 54 பேரும், ஆந்திரத்தில் 31 பேரும், ராஜஸ்தானில் 33 பேரும், உத்தரப் பிரதேசம் 27, தெலங்கானாவில் தலா 26 பேரும், கா்நாடகம், மேற்கு வங்கத்தில் தலா 18 பேரும் உயிரிழந்தனா்.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கையில் மகாராஷ்டிரம் (7,628), குஜராத் (3,071), தில்லி (2,625), ராஜஸ்தான் (2,083), மத்தியப் பிரதேசம் (2,096) ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

தமிழகத்தில் 1,821, உத்தரப்பிரதேசத்தில், 1,793, ஆந்திரத்தில் 1,061, தெலங்கானாவில் 991, மேற்கு வங்கத்தில் 611, கா்நாடகத்தில் 500 ஜம்மு-காஷ்மீரில் 454, கேரளத்தில் 457, பஞ்சாபில் 298, ஹரியாணாவில் 289, பிகாரில் 243, ஒடிஸாவில் 94, ஜாா்க்கண்டில் 67, உத்தரகண்டில் 48, ஹிமாசலில் 40, சத்தீஸ்கா் 37, அஸ்ஸாமில் தலா 36 என்ற அளவில் கரோனா தீநுண்மி பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com