சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 49 பேருக்கு கரோனா பாதிப்பு

சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 49 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் மீண்டும் அதிகரித்துவரும் கரோனா
சீனாவில் மீண்டும் அதிகரித்துவரும் கரோனா

பெய்ஜிங்: சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 49 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. சீனாவில் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டாலும், தற்போது கடந்த 24 மணி நேரத்தில் 49 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 14 பேருக்கு கரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்றிலிருந்து 14 பேர் குணமடைந்துள்ளனர்.

புதிதாக தொற்று கண்டறியப்பட்ட 49 பேரில் 33 பேர் உள்ளூர்வாசிகள் என்றும், 16 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், வடக்கு சீனாவின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற சின்ஜியாங் மாகாணத்தில் அதிகபட்சமாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவில் இதுவரை 54,385 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4,634 பேர் கரோனாவால் உயிரிழந்த நிலையில், 79,003 பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com