ஆடிப்பெருக்கு விழா ரத்து செய்யப்பட்டதால் வெறிச்சோடிய ஒகேனக்கல்

ஆடிப்பெருக்கு விழாவை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ததால் ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்பட்டது. 
வெறிச்சோடிய  ஒகேனக்கல்
வெறிச்சோடிய  ஒகேனக்கல்

பென்னாகரம்: ஆடிப்பெருக்கு விழாவை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ததால் ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்பட்டது. 

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கரோனா தீதுண்மி வேகமாக பரவி வருவதால், கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் தற்போது வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டும் அதில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பொதுமக்கள் அதிகமானோர் கோவில்கள் மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையிலும், ஆடிப்பெருக்கு விழாவானது தளர்வுகள் இன்றி கடைபிடிக்கப்படும் பொது முடக்கமான ஞாயிற்றுக்கிழமையில் வந்ததால் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடிப்பெருக்கு விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டது. 

இந்தநிலையில் பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பருவதன அள்ளி, தாசம்பட்டி, பெரும்பாலை சின்னம்பள்ளி, கூத்தபாடி என பல கிராமங்களில் உள்ள கோவில்களின் சிலைகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரை ஆடிப்பெருக்கு விழா அன்று எடுத்து வரப்பட்டு புனித நீராடல் செய்து அலங்காரம் மேற்கொண்டு மீண்டும் கோவிலுக்கு எடுத்துச் சென்று ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பூஜைகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது ஆடிப்பெருக்கு விழா ரத்து செய்யப்பட்டதால் ஒகேனக்கல் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் நுழையாதவாறு மடம் சோதனைச்சாவடி, முதலைப் பண்ணை, ஒகேனக்கல் மூன்று சாலை பிரிவு , பிரதான அருவி செல்லும் பகுதி உள்ளிட்ட இடங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் ஆடிப்பெருக்கு விழாவில் ஒகேனக்கல் பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் காவிரி கரையோர பகுதிகள் தற்போது வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com