பொதுமுடக்கத்தை மீறி காவிரி துலாக்கட்டத்தில் பக்தர்கள் வழிபாடு

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லா பொதுமுடக்கத்தை மீறி மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடி புனித நீராடி, காவிரி அம்மனுக்கு வழிபாடு நடத்தி, ஆடிப்பெருக்கு விழா
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் பொதுமுடக்கத்தை மீறி வழிபாடு நடத்த கூடிய பக்தர்கள்.
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் பொதுமுடக்கத்தை மீறி வழிபாடு நடத்த கூடிய பக்தர்கள்.


மயிலாடுதுறை: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லா பொதுமுடக்கத்தை மீறி மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடி புனித நீராடி, காவிரி அம்மனுக்கு வழிபாடு
நடத்தி, ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.

மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில்; கங்கை முதலான புண்ணிய நதிகளில் புனிதநீராடி தங்கள் பாவங்களை போக்கிக் கொண்டதாக ஐதீகம். இதனால், இங்கு நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா சிறப்பானதாக கருதப்படுகிறது. 

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் பொதுமுடக்கத்தை மீறி வழிபாடு நடத்த கூடிய பக்தர்கள்.

நிகழாண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு, காவிரியில் நீரோட்டம் உள்ளதால்;, ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தளர்வில்லா பொதுமுடக்கத்தை மீறி காலை 4 மணி முதல் காவிரி துலாக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடி, புனித நீராடி, காவிரி அம்மனுக்கு வழிபாடு நடத்தி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். 

பக்தர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் கருகுமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழ வகைகளை வைத்து, தங்கள் வாழ்வு வளம் பெற காவிரி அன்னைக்கு வழிபாடு நடத்தி புனித நீராடினர். 

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவலர் துறையினர் பக்தர்கள் புனித நீராட தடைவிதித்து திருப்பி அனுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com