சுதந்திரப் போராட்ட வீரர்களை பெருமைப்படுத்துவதில் தமிழக அரசு சிறந்து விளங்குகிறது: அமைச்சர் செங்கோட்டையன்

கரோனா நேரத்திலும் தியாகிகள் அனைவருக்கும் விழாக்கள் எடுக்க வேண்டும் என நினைத்து 5 நபர்கள் மூலம் மரியாதை செலுத்த முதல்வர் ஆணை பிறப்பித்து அனுமதி வழங்கி உள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் திருஉருவ சிலைக்கு ஆட்சியர் கதிரவன், அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன்,  எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் திருஉருவ சிலைக்கு ஆட்சியர் கதிரவன், அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன்,  எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

   
ஈரோடு: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 215 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் கதிரவன், அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன்,  எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி, ஈம்.ஆர்.ராஜா கிருஷ்ணன், ஈஸ்வரன் ஆகியோர் சமூக இடைவெளியினை பின்பற்றி மூன்று மூன்று பேர் வீதம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கரோனா நேரத்திலும் தியாகிகள் அனைவருக்கும் விழாக்கள் எடுக்க வேண்டும் என நினைத்து 5 நபர்கள் மூலம் மரியாதை செலுத்த முதல்வர் ஆணை பிறப்பித்து அனுமதி வழங்கி உள்ளார். ஜெயலலிதா பொறுப்பில் இருக்கும் போது விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வரலாற்று புத்தகம் வெளியிடப்பட்டது.

ஜெயலலிதா தான்  தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவித்தார். அவர் வழியில் ஆட்சி நடத்தும் தமிழக முதல்வர் தியாகிகளை பெருமைப்படுத்துவத்தில் மிக சிறந்து விளங்குகிறார். மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளை பெருமை படுத்துவதில் இந்த அரசு சிறந்து விளங்கி வருகிறது. இந்த பகுதியில் தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். இந்த பணியும் நடந்து வருகிறது. மேலும் இந்த பகுதியில் எம்எல்ஏக்கள் நிதியில் இருந்து ரூ.50 லட்சமும் ஆட்சியர் நிதியிலிருந்து ரூ.30 லட்சம் என மொத்தம் ரூ.80 லட்சம் மதிப்பில் தனியாக கூட்டரங்கம் கட்டும் பணி நடந்து முடிந்துள்ளது. சுதந்திரபோராட்ட வீரர்களுக்கு தமிழகம் முழுவதும் மணி மண்டபங்கள்,சிலைகளை அமைத்து நிறைவேற்றி வருகிறார் தமிழக முதல்வர் என செங்கோட்டையன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com