கரோனா: உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் கமலா ராணி வருண் உயிரிழப்பு

லக்னௌவில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று உத்தரப் பிரதேச மாநில தொழிற்கல்வித்துறை அமைச்சர் கமலா ராணி வருண்(62) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் காலமானார். 
உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் கமலா ராணி வருண்
உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் கமலா ராணி வருண்

லக்னௌ: லக்னௌவில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று உத்தரப் பிரதேச மாநில தொழிற்கல்வித்துறை அமைச்சர் கமலா ராணி வருண்(62) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் காலமானார். 

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் கமலா ராணி வருண் தொழிற்கல்வித்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார்.  62 வயதான இவருக்கு கடந்த மாதம் ஜூலை 18- ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து லக்னௌவில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், பத்து நாள்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் இன்று அயோத்தி சென்று ராமர் கோவில் பூமி பூஜை குறித்து ஆய்வு செய்ய இருந்தார். அமைச்சர் உயிரிழந்ததை தொடர்ந்து அயோத்தி பயணத்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

1958 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி பிறந்த கமல் ராணி, கான்பூர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். 1955 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி கிஷன் லால் வருண் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 

1989 முதல் 1995 வரை கான்பூர் மகாநகர் பரிஷத்தின் உறுப்பினராக இருந்தார். அவர் 1996 இல் 11 வது மக்களவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1996 முதல் 1997 வரை, தொழிலாளர் மற்றும் நலன் குழு மற்றும் தொழில்துறை நல குழுவில் உறுப்பினராக பணியாற்றினார். கடந்த 1997 இல் பெண்களுக்கான அதிகாரமளித்தல் குழுவின் உறுப்பினராக பணியாற்றியவர். அதன்பின் 1998 இல் மீண்டும் 12 வது மக்களவைக்கு உறுப்பிரனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் நாடாளுமன்ற குழுக்கள் பலவற்றில் கமலா ராணி வருண் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com