முகப்பு தற்போதைய செய்திகள்
கர்நாடக காங்., தலைவர் ஆர்.பிரசன்ன குமாருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 03rd August 2020 05:39 PM | Last Updated : 03rd August 2020 05:42 PM | அ+அ அ- |

கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஆர்.பிரசன்ன குமார்
கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஆர்.பிரசன்ன குமாருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த ஜூலை 27ம்-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டதன் மூலம் அவருக்கு கரோனா தொற்று பரவியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, எனக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை. என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று பிரசன்ன குமார் கேட்டுக்கொண்டார்.
இன்று (திங்கள் கிழமை) காலை சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்திற்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவிற்கு நேற்று (ஞாயிற்றுக் கிழமை) கரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.