முகப்பு தற்போதைய செய்திகள்
ஓமனில் இருந்து 50 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்
By PTI | Published On : 03rd August 2020 03:46 PM | Last Updated : 03rd August 2020 03:46 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
ஓமனில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் கடந்த மூன்று மாதங்களில் 50 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த மே மாதத்தில் ஓமனில் கரோனா தொற்று அதிரகரிக்க தொடங்கியவுடன் தனியார் நிறுவனங்கள் ஏற்பாடு செய்த 198 சிறப்பு விமானங்கள் மூலம் 35 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்பினர் என இந்திய தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய அரசு ஏற்பாடு செய்யப்பட்ட வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 97 விமானங்கள் மூலம் 17 ஆயிரம் இந்தியர்கள் ஓமனில் இருந்து நாடு திரும்பியுள்ளார்கள்.
இது குறித்து இந்திய தூதரங்க இரண்டாம் செயலாளர் அனுஜ் ஸ்வரூப் கூறுகையில்,
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளார்கள். தற்போது இந்திய அரசு 5-ம் கட்ட வந்தே பாரத் மூலம் நாடு திரும்ப விரும்ப விரும்புவோரை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது என தெரிவித்தார்.
ஓமானில் சுமார் 7,70,000 இந்தியர்கள் உள்ளனர். அதில் 6,55,000 பேர் தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்திய தூதரகம் அறிக்கையின்படி, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மருத்துவர்கள், பொறியாளர்கள், பட்டய கணக்காளர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், செவிலியர்கள் மற்றும் பிற தொழில் வல்லுநர்களாக பணியாற்றி வருகின்றனர்.