முகப்பு தற்போதைய செய்திகள்
பாகிஸ்தான்: இன்று புதிதாக 330 பேருக்கு கரோனா
By PTI | Published On : 03rd August 2020 01:00 PM | Last Updated : 03rd August 2020 01:00 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
பாகிஸ்தானில் இன்று புதிதாக 330 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 330 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 2,80,027 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இன்று ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு மொத்த பலியின் எண்ணிக்கை 5,984 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,48,973 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,038 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.