முகப்பு தற்போதைய செய்திகள்
நவ. 3-ல் திட்டமிட்டபடி அமெரிக்க அதிபர் தேர்தல் - வெள்ளை மாளிகை
By DIN | Published On : 03rd August 2020 12:23 PM | Last Updated : 03rd August 2020 12:31 PM | அ+அ அ- |

அமெரிக்காவில் நவம்பர் 3 ல் தேர்தல்
அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் 3 ஆம் தேதி திட்டமிட்டபடி அதிபர் தேர்தல் நடைபெறும் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
அதிபர் டிரம்ப் கடந்த ஜூலை 29 ஆம் தேதி தனது சுட்டரில், தபால் வாக்கு மூலம் தேர்தல் நடைபெற்றால் மோசடி நடக்க வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு பல தரப்பில் இருந்து டிரம்ப் தேர்தலை தாமதப்படுத்த பார்க்கிறார் என கருத்து எழுந்தது.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மெடோஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அதிபர் டிரம்ப் கடந்த வாரம் வெளியிட்ட சுட்டரில், தபால் வாக்குகளில் மோசடி நடக்க வாய்ப்புள்ளது என்று தான் கூறினார். தேர்தலை புறக்கணிக்கும் எந்த எண்ணமும் அவருக்கு இல்லை.
நாங்கள் வருகின்ற நவம்பர் 3 ஆம் தேதி திட்டமிட்டபடி அமெரிக்க அதிபர் தேர்தலை நடத்தப் போகிறோம். அதிபர் டிரம்ப் மீண்டும் வெற்றி பெறுவார் என்று மார்க் கூறினார்.