முகப்பு தற்போதைய செய்திகள்
வேதாரண்யம்: பள்ளிகளில் பாடநூல்கள் வழங்கல்
By DIN | Published On : 03rd August 2020 02:50 PM | Last Updated : 03rd August 2020 02:50 PM | அ+அ அ- |

தோப்புத்துறை ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் புத்தகங்கள் வழங்கிய வட்டாரக் கல்வி அலுவலர் சி.சிவகுமார்.
வேதாரண்யம், ஆக.3: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய (இந்து) தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்த பணியை வட்டாரக் கல்வி அலுவலர் வி.சிவக்குமார் தொடங்கி வைத்தார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜி.கோவிந்தராஜுலு, பொருளாளர் ஆர்.சுந்தர்ராஜன், துணைத் தலைவர் வி.ஆர்.வீரராசு, துணைச் செயலாளர் கே.வெற்றிவேல், தலைமையாசிரியர் சு.தட்சிணாமூர்த்தி ஆசிரியர்கள் கி.சாந்தி, கே மாணிக்கம், ஜி.அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.