காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அணைகள் நிரம்பி வருவதால் காவிரி ஆற்றில் சுமார் 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை.
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பென்னாகரம், ஆகஸ்ட் 05: கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பி வருவதால் காவிரி ஆற்றில் சுமார் 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம் மாண்டியா குடகு மற்றும் கேரளா வயநாடு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக அணைகள் ஆன கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து சுமார் 30 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைகளுக்கு வரும் நீர் அப்படியே திறக்கப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவின்பேரில் காவிரி கரையோர பகுதிகளான ஆலம்பாடி, ஊட்டமலை முதலை பண்ணை, சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கும் வகையில், ஒகேனக்கல் அரசு துவக்கப்பள்ளி, ஊட்டமலை துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி கட்டிடங்களில் தங்க வைக்க வருவாய்த் துறையின் சார்பில் முகாம் அமைக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com