பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழை காரணமைாக, பாபநாசம் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து கால்நடைகள் பயன்பாட்டிற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
புதன் கிழமை நீர்மட்டம் 71 அடியாக உள்ள பாபநாசம் அணை
புதன் கிழமை நீர்மட்டம் 71 அடியாக உள்ள பாபநாசம் அணை

 
அம்பாசமுத்திரம்:  தொடர் மழை காரணமைாக, பாபநாசம் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து கால்நடைகள் பயன்பாட்டிற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து சில நாள்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல் மழை இருந்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 

தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கிய நிலையில் போதிய அளவு மழை பெய்யாததால் அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து இருந்தது. 

இந்நிலையில் தற்போது பெய்து வரும் தொடர்மழையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 71 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 2346.92 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து 455 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்த நிலையில், கால்நடைகள் பயன்பாட்டிற்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவிட்டதையடுத்து புதன்கிழமையில் பத்து நாள்களுக்கு மட்டும் 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 91.04 அடியாக உள்ளது.
மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 64 அடியாக உள்ளது. அணையில் நீர் வரத்து 1187 கன அடியாக உள்ளது.

இன்று காலை வரை 24 மணி நேரத்தில் பாபநாசத்தில் 14 மி.மீ., சேர்வலாற்றில் 28 மி.மீ., மணிமுத்தாறில் 7 மி.மீ., மழைப் பதிவாகியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com