இந்தியாவில் விவசாயம் பழகும் ஸ்பெயின் நாட்டு பெண்

கரோனா தொற்றால் இந்தியாவில் விமான சேவை முடங்கி உள்ளதால், நாடு திரும்ப முடியாமல் கிராம வாழ்க்கையை அனுபவித்து, உள்ளூர் மொழியையும் கலாச்சாரத்தையும் கற்றுக் கொண்டு வருகிறார் ஸ்பெயின் நாட்டு ட்ரெசா சொரியானோ
இந்தியாவில் விவசாயம் பழகும் ஸ்பெயின் நாட்டு ட்ரெசா சொரியானோ
இந்தியாவில் விவசாயம் பழகும் ஸ்பெயின் நாட்டு ட்ரெசா சொரியானோ

கரோனா தொற்றால் இந்தியாவில் விமான போக்குவரத்து முடங்கி உள்ளதால், நான்கு மாதங்களாக கர்நாடகாவில் தங்கி, கிராம வாழ்க்கையை அனுபவித்து, உள்ளூர் மொழியையும் கலாச்சாரத்தையும் கற்றுக் கொண்டுள்ளார் ஒரு ஸ்பெயின் நாட்டு குடிமகள் ட்ரெசா சொரியானோ.

ஸ்பெயினின் நகரமான வலென்சியாவைச் சேர்ந்தவர் ட்ரெசா சொரியானோ (வயது 34). இவர் தொழில்துறை வடிவமைப்பாளரான உள்ளார். இவர் இந்தியா மற்றும் இலங்கையை சுற்றிப் பார்க்க கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்தார்.

இந்தியாவில் கரோனா தொற்று அதிகரித்த காரணத்தால் வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவை முடங்கியுள்ளது. முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தரும் சொரியானோ, உடுப்பி மாவட்டத்தில் உள்ள இவரது நண்பர் புஜாரி என்பவர் வீட்டில் தங்கியுள்ளார்.

அந்த கிராமத்தில் உள்ள கலாச்சாரத்தையும், கன்னட மொழியையும், விவசாயத்தையும் கற்றுக் கொண்டு வருகிறார். தற்போது அவர் கன்னட மொழியில் சில வார்த்தைகளையும் பேசி வருகிறார்.

இது குறித்து சொரியானோ கூறுகையில்,

“பொது முடக்க காலத்தில் ஒரு கிராமப்புறத்தில் இருப்பது எனக்கு அதிர்ஷ்டம். நகரங்களுடன் ஒப்பிடும்போது, கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பானவர்கள். இயற்கை சூழலை அனுபவிக்க இங்கு அதிக சுதந்திரம் உள்ளது. 

நான் புதிய அனுபவங்களைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். வேர்க்கடலை சாகுபடி, மாடுகளின் பால் கறத்தல், நெல் நடவு செய்தல், ஆற்றில் மீன்பிடித்தல், காட்டில் இருந்து இலைகளை சேகரித்தல், ரங்கோலி வடிவங்களை உருவாக்குதல் மற்றும் தேங்காய் பிரண்டுகளிலிருந்து விளக்குமாறு தயாரித்தல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது, என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com