ஐ.ஏ.எஸ். தேர்வில் 155 ஆவது இடம் பிடித்த போடி மாணவனுக்கு பாராட்டு

அகில இந்திய அளவில் ஐ.ஏ.எஸ். தேர்வில் 155 ஆவது இடம் பிடித்த போடியை சேர்ந்த மாணவனை கிராம மக்கள் பாராட்டியுள்ளனர்.
சித்தார்த் பழனிச்சாமி
சித்தார்த் பழனிச்சாமி


போடி:   அகில இந்திய அளவில் ஐ.ஏ.எஸ். தேர்வில் 155 ஆவது இடம் பிடித்த போடியை சேர்ந்த மாணவனை கிராம மக்கள் பாராட்டியுள்ளனர்.

போடியை அடுத்துள்ள போடி-மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் நெடுஞ்சாலைத்துறையில் மேற்பார்வை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  இவரது மகன் சரவணபூபதி. இவரது மனைவி ரோசலின். இவர்கள் இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது மகன் சித்தார்த் பழனிச்சாமி (24). இவர் பொறியியல் பட்டதாரி.

சித்தார்த் பழனிச்சாமி புதுதில்லியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் மூலம் படித்து ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினார். இதில் அகில இந்திய அளவில் சித்தார்த் பழனிச்சாமி 155 ஆவது இடம் பிடித்தார். முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார். 

இதுகுறித்து இவரது தாத்தா பழனிச்சாமி கூறியது: நான் நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து மக்கள் சேவை செய்தேன். எனது மகனும், மருகளும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணிபுரிந்து மக்கள் சேவை செய்கின்றனர்.

எனது பேரனையும் எங்களை போலவே மக்கள் சேவை செய்ய ஊக்கப்படுத்தினேன். எனது பேரன் சித்தார்த் திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர். எனது ஊக்கத்தினால் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். என் மீதுள்ள பாசத்தினால் அவரது பெயருக்கு பின்னால் எனது பெயரை சேர்த்து சித்தார்த் பழனிச்சாமி என வைத்துக்கொண்டார். கடுமையான பயிற்சி மூலம் எனது பேரன் ஐ.ஏ.எஸ். தேர்வானதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எனது பேத்தியும் மருத்துவ படிப்பு படித்து வருகிறார் என்றார்.

சித்தார்த் பழனிச்சாமியின் சொந்த ஊர் போடி மீனாட்சிபுரம் என்றாலும் தற்போது மதுரை அருகே வசித்து வருகின்றனர். இவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றதை அறிந்த போடி மீனாட்சிபுரம் கிராம மக்கள் அவருக்கு சமூக வலை தளங்கள் மூலம் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com