போடியில் மின் திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

போடியில் திங்கள் கிழமை மாலை, புதிய மின்சார சட்டத்தை கண்டித்து மின் திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போடியில் மின் திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
போடியில் மின் திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

போடி, ஆக. 10: போடியில் திங்கள் கிழமை மாலை, புதிய மின்சார சட்டத்தை கண்டித்து மின் திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு புதிய மின்சார சட்டம் 2020 ஐ கைவிடவேண்டும், மாநில மின் வாரியங்களை பிரிக்கக் கூடாது, பொதுத்துறையான மின் துறையை தனியாருக்கு விற்கக் கூடாது, மின் திட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என கூறினர். 

மேலும், காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்,  தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தக் கூடாது, ஊரடங்கு காலத்தில் முழு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போடி மின் வாரிய அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் மின் திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போடி மின்வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மின் திட்ட ஊழியர்கள் சங்க பொருளாளர் சி.பாலமுருகன் தலைமை வகித்தார். இதில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com