குஜராத்: முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம்

குஜராத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி | கோப்புப் படம்
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி | கோப்புப் படம்

குஜராத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

கடந்த மாதம் குஜராத் உயர் நீதிமன்றம் முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கும்படி மாநில அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.

இது குறித்து குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி கூறுகையில்,

குஜராத் உயர் நீதிமன்றம் பரிந்துரைப்படி வரும் ஆகஸ்ட் 11 முதல்  முகக்கவசம் அணியாமல் வந்தால் ரூ.1000 அபராதமாக விதிக்கப்படும்.

சமூகப் பரவலைத் தடுக்க முகக்கவசம் மிக அவசியமான ஒன்று. எதிர் காலங்களில் வரும் பண்டிகைகளுக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே கொண்டாடுங்கள் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com