புதுவை வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கரோனா

புதுவை  வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு இன்று கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுவை வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கரோனா
புதுவை வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கரோனா

புதுவை  வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு இன்று கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் இன்று புதிதாக 245 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5174 இருந்து வருகிறது. 

முன்னதாக, கடந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட என்ஆர் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் என்.எஸ்.ஜெ.ஜெய பாலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் முதல்வர், அமைச்சர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதனிடையே காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மாவிற்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் சிகிச்சையில் உள்ளார்.

அவருடன் ஆட்சியர் அலுவலகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வேளாண் அமைச்சர் இரா.கமலக்கண்ணனுக்கு சளித்தொல்லை ஏற்பட்டது. இதனால் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், திங்கள்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவர் தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com