உள்நாட்டு உற்பத்தியால் செலவினம் குறையும்: அமைச்சர் ராஜ்நாத் சிங்

உள்நாட்டிலேயே ராணுவ தளவாட உற்பத்தியை துவங்கினால் நாட்டின் பெரும்பகுதி செலவினத்தை சேமிக்க முடியும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு உற்பத்தியால் செலவினம் குறையும்: அமைச்சர் ராஜ்நாத் சிங்

உள்நாட்டிலேயே ராணுவ தளவாட உற்பத்தியை துவங்கினால் நாட்டின் பெரும்பகுதி செலவினத்தை சேமிக்க முடியும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்திருந்தார்.

சுயசார்பு திட்டத்தின் கீழ் பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், 2020-2024-ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இன்று (திங்கட் கிழமை) பாதுகாப்புத்துறை சார்ந்து தன்னம்பிக்கை இந்தியா வாரம் என்ற திட்டத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது, உள்நாட்டு உற்பத்தியை துவங்குவதன் மூலம் நாட்டின் பெரும்பகுதி செலவினத்தை குறைக்க இயலும். இறக்குமதி செலவை குறைப்பதன் மூலம் நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை வளர்க்க இயலும் என்று தெரிவித்தார்.

முப்படைகளுக்கும் ரூ.4 லட்சம் கோடி அளவிலான தளவாடங்கள் அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளுக்குள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும். துப்பாக்கிகள், சரக்கு போக்குவரத்துக்கான விமானங்கள், ரேடார்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com