ஒடிசாவில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு: முதல்வர் பட்நாயக்

ஒடிசாவில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்படடுள்ளதாக முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

ஒடிசாவில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்படடுள்ளதாக முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். கரோனாவிற்கு எதிரான போரில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு ஒடிசா தயாராகியுள்ளதாகவும் கூறினார்.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒடிசாவிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒடிசாவில் ஒரு நாளில் மட்டும் 1,876 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 50,672-ஆக அதிகரித்துள்ளது. நேற்று (செவ்வாய்க் கிழமை) 32,053 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதனிடையே இது குறித்து முதல்வர் நவீன் பட்நாயக் பேசியதாவது, கரோனாவிற்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று. ஊரடங்கு காலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்காக செலவழித்து பொருளாதார ரீதியில் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இதனை அரசு வழங்கி வருகிறது. மாநிலத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்டலம் மற்றும் பஞ்சாயத்து அளவிலும் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

கடந்த 5 மாதங்களாக கரோனாவுக்கு எதிராக ஒடிசா அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்களப் பணியாளர்களுக்கு மிகமுக்கிய பங்கு உள்ளது. கரோனா பரவலை சீராக மதிப்பீடு செய்து அதற்கேற்ப முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மூன்று வார கால இடைவெளியில் 5 பிளாஸ்மா சிகிச்சை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com