அடல் பிஹாரி வாஜ்பாய் பல்கலைக்கழக நிர்வாகப் பணிகள் விரைவில் தொடக்கம்

லக்னோவில் உத்தரப்பிரதேச அரசு அமைக்கும் அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பணிகள் அடுத்த மாதத்திலிருந்து தொடங்கப்படும் என்று துணைவேந்தர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

லக்னோவில் உத்தரப்பிரதேச அரசு அமைக்கும் அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பணிகள் அடுத்த மாதத்திலிருந்து தொடங்கப்படும் என்று துணைவேந்தர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தரும் புகழ்பெற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான ஏ.கே.சிங் கூறுகையில்,

லக்னோ நகரத்தின் சுல்தான்பூர் சாலையில் 50 ஏக்கர் நிலத்தை மாநில அரசு பல்கலைக்கழகம் கட்ட வழங்கியுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும்.

இருப்பினும், அதன் நிர்வாகப் பணிகள் செப்டம்பர் முதல் வாரத்தில் கோமதி நகரில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவ நிறுவன கட்டிடத்திலிருந்து தொடங்கும். 

இந்த புதிய மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதன் மூலம் சுமார் 60 அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகள், 300 நர்சிங் கல்லூரிகள் மற்றும் துணை மருத்துவ நிறுவனங்கள் இதன் கீழ் வரும் என்று சிங் கூறினார்.

பல்கலைக்கழகத்தின் சின்னம் மற்றும் கோஷத்தை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்படும். இதற்கான இணையவழி போட்டிகள் நடந்து வருகின்றது. மேலும், போட்டியில் சிறந்த சின்னம் மற்றும் கோஷத்தை அனுப்பும் போட்டியாளருக்கு பரிசு வழங்கப்படும்.

இந்த பல்கலைக்கழகம் ரூ. 200 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதில் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, நிர்வாகக் கட்டடம், கலையரங்கம், அருங்காட்சியகம், விருந்தினர் மாளிகை மற்றும் வீட்டுவசதிப் பகுதிகள் கட்டப்படும் என்று அவர் கூறினார். .

கடந்த 2019 டிசம்பர் 25-ம் தேதி அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com