மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கரோனாவை தடுக்க முடியும்: முதல்வர் பேச்சு

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கரோனாவை தடுக்க முடியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கரோனாவை தடுக்க முடியும்: முதல்வர் பேச்சு

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கரோனாவை தடுக்க முடியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.243.35 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 

கரோனா தடுப்புப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, மாவட்டங்கள் வாரியாக சென்று வருகிறாா். அதன்படி வெள்ளிக்கிழமை (ஆக.21) காலை 10 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்றார். இவ்விழாவில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் வெ.சரோஜா ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகளின் சாா்பில் ரூ.14.44 கோடி மதிப்பீட்டில் 26 முடிவுற்ற திட்டப் பணிகளை அவா் திறந்து வைத்தார். மேலும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, வருவாய்த் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாா்பில் ரூ.137.65 கோடி மதிப்பீட்டில் 130 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

இதனைத் தொடா்ந்து பல்வேறு துறைகளின் சாா்பில் 19,132 பயனாளிகளுக்கு ரூ.91.26 கோடி மதிப்பில் அரசு நலத் திட்ட உதவிகளை முதல்வா் வழங்கினார். மொத்தம் ரூ.243.35 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

பின்னா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், நாமக்கல் மாவட்டத்தின் வளா்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அனைத்துத் துறை முதன்மை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிா்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட மகளிா் சுயஉதவிக்குழுவினருடன் முதல்வா் கலந்துரையாடினார். 

அப்போது, கரோனாவை தடுப்பதில் முன்னணி மாவட்டமாக நாமக்கல் திகழ்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் கரோனாவின் தாக்கம் கட்டுக்குள் உள்ளது. கரோனா தொற்றால் உலக அளவில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவுறுத்தியுள்ள கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.  மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கரோனாவை தடுக்க முடியும். 

மக்கள் ஒவ்வொரு முறையும் வெளியே செல்லும் போதும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும்.  வீடுகளையும், கழிப்பறைகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தமிழகத்தில் தினந்தோறும் 68 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இதில் 6 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதியாகி வருகிறது. இந்தியாவிலேயே கரோனா பரிசோதனைகள் அதிகம் செய்யப்படும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தொற்று பாதித்தவர்களுக்கு மனநிறைவு அளிக்கும்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

நாமக்கல் அனைத்து வகையிலும் சிறந்து விளங்கும் மாவட்டம் என்றால் மிகையில்லை.  கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டமாக நாமக்கல் திகழ்கிறது. முட்டை, ஜவ்வரிசி உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் மாவட்டம். நாமக்கல் லாரி தொழிலுக்கு பெயர் பெற்ற மாவட்டம் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறினார். 

இவ்விழாவில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com