பிரிட்டனில் காந்தியின் கண்ணாடி ரூ. 2.55 கோடிக்கு ஏலம்

இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் மகாத்மா காந்தி உபயோகித்த மூக்குக் கண்ணாடி பிரிட்டனில் ரூ. 2.55 கோடிக்கு வெள்ளிக்கிழமை ஏலம் விடப்பட்டுள்ளது.
ரூ. 2.55 கோடிக்கு விற்பனையான காந்தியின் கண்ணாடி
ரூ. 2.55 கோடிக்கு விற்பனையான காந்தியின் கண்ணாடி

இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் மகாத்மா காந்தி உபயோகித்த மூக்குக் கண்ணாடி பிரிட்டனில் ரூ. 2.55 கோடிக்கு வெள்ளிக்கிழமை ஏலம் விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிழக்கு பிரிஸ்டோல் ஏல நிறுவன இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில்,  இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் மகாத்மா காந்தி உபயோகித்த தங்க முலாம் பூசப்பட்ட மூக்குக் கண்ணாடி பிரிட்டனில் ரூ. 2.55 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

கண்ணாடியை வைத்திருந்தவர், ஒரு வாரத்திற்கு முன் தங்க முலாம் பூசிய பிரேம்களை கொண்ட அந்த மூக்கு கண்ணாடியை தனது வீட்டின் ஒரு பெட்டியில் இருந்து எடுத்துள்ளார்.

காந்தி இயல்பாகவே தான் உபயோகித்த பொருள்களை மற்றவர்களுக்கு கொடுக்கும் பழக்கம் கொண்டவர். இந்நிலையில் தென் ஆப்ரிகாவில் 1910-1920 ஆண்டுகளில் காந்தி வசித்த போது அவரின் மாமாவிற்கு காந்தி அந்த கண்ணாடியை கொடுத்துள்ளார். அவர் மாமா மறைந்த பிறகு தற்போது அந்தக் கண்ணாடியை பெட்டியில் இருந்து எடுத்துள்ளனர். 

இந்த தகவல் அனைத்தும் உறுதி செய்யப்பட்டதாகவும் நிறுவன உரிமையாளர் ஆண்ட்ரூ ஸ்டோவ் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com