ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு

வடக்கு ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட வெள்ளத்தால் 150க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனார்.
மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது
மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது

வடக்கு ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட வெள்ளத்தால் 150க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனார்.

வடக்கு ஆப்கானிஸ்தான் பர்வான் மாகாண மற்றும் பிற பகுதிகளில் செவாய்க்கிழமை இரவு முதல் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தால் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டது. மேலும், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்சரிவில் இடிந்து விழுந்துள்ளது. 

இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் பேரிடர் மேலாண்மை துணை அமைச்சர் முகமது காசிம் ஹைதாரி கூறுகையில், வீடுகள் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளார்கள். அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வெள்ளத்தால், இதுவரை குழந்தைகள் உள்பட 150-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை, பர்வானில் 102 பேரும், தலைநகர் காபூலில் 19 பேரும், வடக்கு கபீசாவில் 17 பேரும், கிழக்கு வார்தாக்கில் 7 பேரும், வடக்கு பஞ்ச்ஷீரில் 3 பேரும், கிழக்கு நங்கர்ஹாரில் 2 பேரும், கிழக்கு பாக்தியாவில் ஒருவரும் பலியாகியுள்ளனர் என கூறினார்.

பர்வான் மாகாண மருத்துவமனையின் தலைவர் அப்துல் காசிம் சாங்கின் கூறுகையில், ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒரு சடலம் மருத்துவமனைக்கு வருவதாகக் கூறினார்.

மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபாயம் எழுந்துள்ளது.

கோடை காலங்களில், பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் அதிகளவிலான மழைப் பெய்வதால் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகின்றது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com