மூன்றில் ஒருவருக்கு மட்டுமே தொலைதூரக் கல்வி கிடைக்கிறது : யுனிசெஃப்

கரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் உலகளவில் மூன்றில் ஒரு மாணவரால் தொலைதூரக் கல்வியை அணுக முடியவில்லை என யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
மூன்றில் ஒருவருக்கு மட்டுமே தொலைதூரக் கல்வி கிடைக்கிறது (கோப்புப்படம்)
மூன்றில் ஒருவருக்கு மட்டுமே தொலைதூரக் கல்வி கிடைக்கிறது (கோப்புப்படம்)

கரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் உலகளவில் மூன்றில் ஒரு மாணவரால் தொலைதூரக் கல்வியை அணுக முடியவில்லை என யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யுனிசெஃப் வெளியிட்ட அறிக்கையில், 

கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் 46.3 கோடி குழந்தைகளுக்கு  தொலைதூரக் கற்றல் போன்றவை கிடைக்கவில்லை.

பல மாதங்களாக கல்வி நிறுவனங்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ள நிலையில் ‘உலகளாவிய கல்வி அவசரநிலை’ ஏற்பட்டுள்ளது. இதன் எதிர்விளைவுகளை, பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் வரவிருக்கும் அசாதாரண சூழலில் உணரப்படலாம். தொலைக்காட்சி, வானொலி, இணையதளம் மூலம் நடத்தப்படும் தொலைதூரக் கல்வி குறித்து 100 நாடுகளில் ஆய்வு செய்தோம். 

இதில், கிழக்கு மற்றும் தென் ஆப்ரிக்காவில் 49 சதவீதம், மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்காவில் 48 சதவீதம், கிழக்கு ஆசியாவில் 20 சதவீதம், மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவில் 40 சதவீதம், தென் ஆசியாவில் 38 சதவீதம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசியாவில் 34 சதவீத குழந்தைகளால் தொலைதூரக் கல்வியை அணுக முடியவில்லை. 

உலகளவில் மொத்தமாக 31 சதவீத குழந்தைகளால் தொலைதூர கல்வியை அணுக முடியவில்லை. அதில், மற்ற நாடுகளைக் காட்டிலும் ஆப்ரிக்க நாடுகளின் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பெரும்பாலான கிராமப்புறக் குழந்தைகள் இணையம், மின்சாரம் அல்லது பல நாடுகள் அறிமுகப்படுத்திய கல்வித் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு இல்லாத ஏழை வீடுகளில் வாழும் குழந்தைகள். அறிக்கையில் இருக்கும் நிலையைவிட நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

குழந்தைகளுக்கு தொழில்நுட்ப வசதி வீட்டில் இருந்தாலும், வீட்டு சூழலில் உள்ள அழுத்தம் அல்லது அமைதியில்லா சூழலால் அவர்களுக்கு கல்வியானது முழுமையாக கிடைப்பதில் சிக்கல் உண்டாகியுள்ளது என கூறியுள்ளனர்.

சிறுவர் உரிமை அமைப்புகள் தரப்பில் கூறுகையில், பள்ளிகள் மூடியதால் பெண் குழந்தைகளுக்கு ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பாலியல் வன்முறை மற்றும் குழந்தை திருமணம் அதிகளவில் நடந்துள்ளதாக கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com