ராஜஸ்தானில் 15 மருத்துவக் கல்லூரிகள் திறக்க ஒப்புதல் : சுகாதார அமைச்சர்

ராஜஸ்தானில் புதிதாக 15 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் திறக்க ஒப்புதல் கிடைத்துள்ளதாக ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் மருத்துவர் ரகு சர்மா தெரிவித்தார்.
ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் மருத்துவர் ரகு சர்மா
ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் மருத்துவர் ரகு சர்மா

ராஜஸ்தானில் புதிதாக 15 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் திறக்க ஒப்புதல் கிடைத்துள்ளதாக ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் மருத்துவர் ரகு சர்மா தெரிவித்தார்.

இதுகுறித்து சுகாதார அமைச்சர் மருத்துவர் ரகு சர்மா கூறுகையில், 

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்க வேண்டும் என்ற மாநில அரசின் திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது,.இதையடுத்து விரைவில் 15 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்படும்.

தற்போது மூன்று மாவட்டங்களில் 8 மருத்துவக் கல்லூரிகள் புதிதாக திறக்கப்பட்டது. அதில், அரசு மருத்துவக் கல்லூரிகள் எதுவும் இல்லை. தற்போது கிடைத்த ஒப்புதல் மூலம் 15 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.

சுகாதாரத்துறையில் நாட்டின் முன்மாதிரியான மாநிலமாக திட்டங்களை வடிவமைத்து ராஜஸ்தான் அரசு செயல்படுத்தி வருகின்றது.  முதலமைச்சர் அசோக் கெஹ்லோட்டின் வலுவான தலைமையில் சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார மனிதவளத் துறையில் வலுப்பெற்று வருகிறது.

மேலும், கரோனா பரிசோதனை மாநிலம் முழுவதும் 22 லட்சம் மக்களுக்கு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 51 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றோம்.

தீவிர சிகிச்சை நோயாளிகளுக்கு ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள உயிர் காக்கும் ஊசி மருந்துகளை மாநில அரசு இலவசமாக வழங்கி வருவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com