உ.பி.யில் 690 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிப்பு

உத்தரபிரதேச மாநிலத்தில் 16 மாவட்டங்களில் 600க்கும் அதிகமான கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
உ.பி.யில் 690 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிப்பு
உ.பி.யில் 690 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிப்பு

உத்தரபிரதேச மாநிலத்தில் 16 மாவட்டங்களில் 600க்கும் அதிகமான கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலாண்மைத்துறை ஆணையர் சஞ்சய் கோயல் கூறுகையில்,

உத்தரபிரதேசத்தில் உள்ள ஷார்தா மற்றும் சாரியு நதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அம்பேத்கர்நகர், அயோத்தி, அசாம்கர், பஹ்ரைச், பல்லியா, பராபங்கி, பாஸ்தி, தியோரியா, ஃபாரூகாபாத், கோண்டா, கோரக்பூர், லக்கிம்பூர் கிரி, குஷினகர், மவு மற்றும் சாண்ட் கபீர் நகர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் உள்ள 690 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 299 கிராமங்கள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

மாநிலம் அரசு சார்பில் 372 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தி மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மீட்புப் பணிகளுக்காக 465 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மத்திய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவின் 29 குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com