பெருந்துறை சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: மேற்குவங்க இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

பெருந்துறை அருகே 8 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஈரோடு: பெருந்துறை அருகே 8 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பனியம்பள்ளி பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். இங்கு மேற்குவங்க மாநிலம் பார்கனஸமொக்னபுர் பகுதியை சேர்ந்த காசிம் மண்டல் என்பவருடைய மகன் ரெபியுல் மண்டல்(26) என்பவர் தங்கி இருந்தார். இவர் மீது கடந்த 16-4-2019 அன்று அதே பகுதியில் வசித்து வந்த பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் புகார் அளித்தனர்.
அதில் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வந்து பெருந்துறையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், 11 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்து. கடந்த 13-4-2019 அன்று அருகில் வசிக்கும் ரெபியுல் மண்டல் என்பவர் தங்களது வீட்டுக்கு வந்து மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இதனால் மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்பேரில் மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி, குற்றம் உறுதி செய்யப்பட்டதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட ரெபியுல் மண்டல் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி மாலதி விசாரித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.
 

அதில் குற்றம்சாட்டப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ரெபுயுல் மண்டலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.3 லட்சம் வழங்கவும் அரசுக்கு நீதிபதி மாலதி பரிந்துரை செய்துள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜரானார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com