ஜே.டி.யு.வின் 17 எம்.எல்.ஏ.க்கள் ஆர்.ஜே.டி.யுடன் தொடர்பில் உள்ளனர்: ஷியாம் ராஜக்

பிகாரில் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் ஷியாம் ராஜக் தெரிவித்துள்ளார்.
படம்: டிவிட்டர்- ஷியாம் ராஜக்
படம்: டிவிட்டர்- ஷியாம் ராஜக்

பிகாரில் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் ஷியாம் ராஜக் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் பிகாரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜனதா தளம் அடங்கிய கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி, 110 தொகுதிகளில் வென்று எதிர்கட்சியாக உள்ளது.

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளத்தின் 17 எம்.எல்.ஏ.க்கள் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் தொடர்பில் உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஷியாம் ராஜக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஷியாம் கூறியதாவது,

ஜனதா தளத்தின் 17 எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர், அவர்கள் எந்த நேரத்திலும் எங்கள் கட்சியுடன் சேர தயாராக உள்ளனர்.

“ஐக்கிய ஜனதா தளத்தின் 17 எம்.எல்.ஏக்கள் எங்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர் மற்றும் எந்த நேரத்திலும் எங்கள் கட்சியில் சேர தயாராக உள்ளனர். விலகல் எதிர்ப்புச் சட்டத்தை மீற, நாங்கள் விரும்பவில்லை.

மேலும், அவர்கள் 28 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழுவாக வரும்போதுதான் எங்கள் கட்சிக்கு வரவேற்போம் என்று அவர்களிடம் கூறியுள்ளோம். அவர்களின் குழு மிக விரைவில் 28 ஆக உயரும்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com