புதுச்சேரியில் ஜன.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு
By DIN | Published On : 31st December 2020 05:21 PM | Last Updated : 31st December 2020 05:21 PM | அ+அ அ- |

புதுச்சேரியில் தற்போதிருக்கும் தளர்வுகளுடன் ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் புதுச்சேரியில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா தொற்று குறைந்திருந்தாலும், பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதுவகை கரோனா நோய்ப் பரவலின் அச்சுறுத்தல் உள்ளது.
இதையடுத்து, புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன், தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.