தலைநகரில் தங்கத்தின் விலை ரூ.277 அதிகரிப்பு
By DIN | Published On : 01st February 2020 04:42 PM | Last Updated : 01st February 2020 04:42 PM | அ+அ அ- |

புதுதில்லி: தேசிய தலைநகர் தில்லியில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை 10 கிராமுக்கு ரூ.277 அதிகரித்து ரூ.41,923 ஆக உயர்ந்துள்ளது என்று எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.41,646 ஆக இருந்தது.
இன்றைய வர்த்தகத்தில் கட்டி வெள்ளியின் விலையும் உயா்ந்துள்ளது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.483 உயர்ந்து ஒரு கிலோ ரூ.48.096 ஆக உயர்ந்துள்ளது. முந்தைய வர்த்தகத்தில் ஒரு கிலோவுக்கு ரூ.47,613 ஆகவும் இருந்தது. வெள்ளியின் விலையின் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளது.
வார இறுதி வெளிநாட்டு சந்தையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு குறித்து எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் மூத்த ஆய்வாளர் தபன் படேல் கூறுகையில், தில்லியில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.277 அதிகரித்துள்ளது, உலக தங்க விலையில் ஒரே இரவில் கிடைத்த லாபத்தை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.