இந்தூர்-வாரணாசி இடையே 3-வது தனியார் ரயில்: ஐஆர்சிடிசி அறிவிப்பு

அதி நவீன வசதிகள் கொண்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசி...
இந்தூர்-வாரணாசி இடையே 3-வது தனியார் ரயில்: ஐஆர்சிடிசி அறிவிப்பு



புதுதில்லி: ஐஆர்சிடிசியின் மூன்றாவது தனியார் ரயில் இந்தூர் - வாரணாசி இடையே இயக்கப்படும் என்று ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். 

தலைநகர் தில்லி - உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோ இடையே, அதி நவீன வசதிகள் கொண்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இயக்கி வருகிறது. இதன் மூலம் நாட்டின் முதல் தனியார் ரயில் என்ற பெருமையை இந்த தேஜஸ் ரயில் பெற்றது.

இரண்டாவதாக அகமதாபாத் - மும்பை வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்கத் தொடங்கியது.

இந்நிலையில், ஐஆர்சிடிசியின் மூன்றாவது தனியார் ரயில் இந்தூர் - வாரணாசி வழித்தடங்களில் ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com