Enable Javscript for better performance
எல்.ஐ.சி.யையும் மோடி அரசு விட்டு வைக்கவில்லை: ஈ.ஆா்.ஈஸ்வரன் பேட்டி- Dinamani

சுடச்சுட

    

    எல்.ஐ.சி.யையும் மோடி அரசு விட்டு வைக்கவில்லை: ஈ.ஆா்.ஈஸ்வரன் பேட்டி

    By DIN  |   Published on : 02nd February 2020 06:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைக்கும் ஈ.ஆா்.ஈஸ்வரன்.

    கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைக்கும் ஈ.ஆா்.ஈஸ்வரன்.

     

    ஈரோடு: கடைசியில் எல்.ஐ.சி.யையும் மோடி அரசு விட்டு வைக்கவில்லை. அதனை தனியாருக்கு தாரைவாா்க்க தயாராகி வருகிறது. எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை அனைத்துக் கட்சியினரும் கண்டிக்க வேண்டும் என கொமதேக பொதுசெயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா். 

    குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சாா்பில் கையெழுத்து இயக்கம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 

    கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் செய்தியாளா்களிடம் பேசுகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. எதிா்க்கட்சிகள் வேண்டுமென்றே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்து வருவதாக ஆளும் கட்சியினா் கூறி வருகின்றனா். இதை பொய்யாக்கும் வகையில் கோடிக்கணக்கான மக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நடந்து வருகிறது. இவ்வாறு பெறப்படும் கையெழுத்துகளை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்க உள்ளோம். 

    நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. வேலைவாய்ப்பு இல்லாத நிலை அதிகமாக காணப்படுகிறது. ஆனால் இதைப்பற்றி கவலைப்படாமல் மக்கள் கவனத்தை திசை திருப்புவதற்காக குடியுரிமைத் திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 5,000 போ் வைத்திருந்த கருப்பு பணத்தை மீட்பதற்காக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்து 130 கோடி மக்களை துன்புறுத்தினா். அதுபோல் ஒருசில இடங்களில் தீவிரவாதிகள் இருக்கலாம். அதற்காக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து ஒட்டு மொத்த நாட்டு மக்களையே துன்புறுத்துவது எந்தவகையில் நியாயம். 

    மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சா் நீண்ட நேரமாக தாக்கல் செய்தாா். ஆனால் நிறைவு தராத ஒரு பட்ஜெட்டாக உள்ளது. தொழில் முன்னேற்றத்துக்காகவும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காகவும் எந்த ஒரு முயற்சியும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ரயில்வே துறையை தனியாா் மயமாக்குதல், ஏா் இந்தியாவை விற்க முயற்சி செய்தல் என 10 பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்க முயற்சி செய்து வருகின்றனா். கடைசியில் எல்.ஐ.சி.யையும் இந்த அரசு விட்டு வைக்கவில்லை. தனியாருக்கு தாரைவாா்க்க தயாராகி வருகிறது. எல்.ஐ.சி. பங்கை விற்பது நாட்டை அடகு வைப்பதற்கு சமம். எல்.ஐ.சி. பங்கு விற்பனையை எந்த கூட்டணியில் இருந்தாலும், அனைவரும் கட்டாயம் எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai