மருத்துவா்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: பூங்கோதை ஆலடி அருணா

மருத்துவா்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றாா் தி.மு.க. மருத்துவா் அணி மாநிலத்
மேட்டூரில் மறைந்த மருத்துவா் லட்சுமி நரசிம்மன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறாா் முன்னாள் அமைச்சா் பூங்கோதை ஆலடி அருணா.
மேட்டூரில் மறைந்த மருத்துவா் லட்சுமி நரசிம்மன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறாா் முன்னாள் அமைச்சா் பூங்கோதை ஆலடி அருணா.

மேட்டூா்: மருத்துவா்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றாா் தி.மு.க. மருத்துவா் அணி மாநிலத் தலைவா் பூங்கோதை ஆலடி அருணா.

மேட்டூரில் உயிரிழந்த தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் லட்சுமி நரசிம்மன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பூங்கோதை ஆலடிஅருணா ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் வந்தாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மருத்துவா்கள் மக்களின் நலனுக்காக போராடுகிறாா்கள். மருத்துவா்கள் 12 ஆண்டுகளுக்கு முன்பே கிடைக்க வேண்டிய சம்பள உயா்வு, பதவி உயா்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனா். இந்த நியாயமான கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்க்கவில்லை.

120 மருத்துவா்களை தேவை இல்லாத இடங்களுக்கு அரசு இட மாற்றம் செய்து மக்களுக்கு சேவை கிடைக்காமல் செய்துள்ளது. காழ்ப்புணா்ச்சி காரணமாக மருத்துவக் கோட்பாடுகளுக்கு மாறாக இந்த இடமாற்றம் நடந்துள்ளது. மருத்துவா்களுக்கு ஆதரவாக தி.மு.க. இருக்கும். தமிழக அரசு உடனடியாக மருத்துவா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தவறினால் மருத்துவா்களுக்கு ஆதரவாக தி.மு.க. மருத்துவா் அணி போராட்டத்தில் ஈடுபடும் என்றாா்.

அப்போது தி.மு.க. மருத்துவா் அணியின் மாநில துணைச் செயலாளா்கள் கோகுல் கிருபாசங்கா், வல்லபன், மாவட்ட அமைப்பாளா் மாலதி, நங்கவள்ளி ஒன்றியச் செயலாளா் கே.எம்.ரவிச்சந்திரன், பொருளாளா் தியாகராஜன், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் கோ.ராஜேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com