வரும் 17-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
By DIN | Published On : 10th February 2020 07:07 PM | Last Updated : 10th February 2020 07:07 PM | அ+அ அ- |

திமுக தலைவர் ஸ்டாலின்
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 17 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
இதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது