விரைவில் புதிய ஒரு ரூபாய் நோட்டு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகளைத் தடுப்பதற்காக ரூபாய் நோட்டுகளில்
விரைவில் புதிய ஒரு ரூபாய் நோட்டு!

விரைவில் புதிய ஒரு ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஒரு ரூபாய் நோட்டின் ஒட்டுமொத்த நிறம் இளஞ்சிவப்பு பச்சை நிறத்துடன், மற்ற வண்ணங்களும் இணைந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விரைவில் புதிய ஒரு ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகளைத் தடுப்பதற்காக ரூபாய் நோட்டுகளில் வண்ணம், வடிவமைப்பு, எடை போன்றவற்றில் அதிரடியாக மாற்றம் செய்து பல வண்ணங்களில் ரூ.10, 20, 50, 100, 500, 2000 நோட்டுகளை வெளியிட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து ஒரு ரூபாய் நோட்டுகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வடிவமைப்புடன் கூடிய புதிய வண்ணங்களில் புழக்கத்தில் விட உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. 

புதிய ஒரு ரூபாய் நோட்டு 9.7 x 6.3 செ.மீ நீள அகலத்துடன் செவ்வக வடிவில், நூறு சதவீதம் பருத்தி காகிதத்துடன் 110 மைக்ரான் தடிமன் மற்றும் 90 ஜிஎஸ்எம் எடைக்கொண்டதாவும் இருக்கும். அசோகத்தூணுடன் (சத்யமேவ் ஜெயதே), மையத்தில் மறைவாக '1' குறிக்கப்பட்டிருக்கும்.  வலதுபுறத்தில் செங்குத்தாக அமைக்கப்பட்ட பாரத் என்ற சொற்கள், தலைகீழாக, ஒரு ரூபாய் 2020 ஆம் ஆண்டுடன் "இந்திய அரசு" என்ற சொற்களும், ரூபாயை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் '₹' 2020  சின்னத்துடன், நாட்டின் விவசாயத்தை சித்தரிக்கும் வகையில் தானியங்களின் வடிவமைப்பு மற்றும் அதனைச் சுற்றி  'சாகர் சாம்ராட்' எண்ணெய் ஆய்வு தளம், பதினைந்து இந்திய மொழிகளும் இடம் பெற்றிருக்கும்.

ஒரு ரூபாய் நோட்டின் எதிரெதிர் பக்கத்தில் “இந்திய அரசு” என்ற சொற்களுக்கும், நிதி அமைச்சின் செயலாளர் ஸ்ரீ அதானு சக்ரவர்த்தியின் இருமொழி கையொப்பமும் இடம் பெற்றிருக்கும்.  இடமிருந்து வலமாக எண்களின் ஏறுவரிசையிலும், வலது புறத்தின் கீழ் எண் கருப்பு நிறத்தில் இருக்கும், அதே நேரத்தில் முதல் மூன்று எண்ணெழுத்துகள் அளவு மாறாமல் இருக்கும். ஒரு ரூபாய் நோட்டின் ஒட்டுமொத்த நிறம் இளஞ்சிவப்பு பச்சை நிறமாகவும், மற்ற வண்ணங்களுடன் இணைந்து தலைகீழாகவும் இருக்கும். இவ்வாறு பல வடிவம், வண்ணங்கள் என  சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய ஒரு ரூபாய் நோட்டு விரைவில் புழக்கத்திற்கு வரவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com