காா்கி கல்லூரி விவகாரம்: முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது தில்லி காவல்துறை

கார்கி மகளிர் கல்லூரியின் ஆண்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. விழா நடந்து கொண்டிருந்தபோது...
காா்கி கல்லூரி விவகாரம்: முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது தில்லி காவல்துறை

புது தில்லி: காா்கி கல்லூரி விவகாரம் தொடா்பாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது தில்லி காவல்துறை. 

புதுதில்லியில் 50 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வரும் கல்லூரி கார்கி மகளிர் கல்லூரி. இந்தக் கல்லூரியின் ஆண்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. விழா நடந்து கொண்டிருந்தபோது, கல்லூரிக்கு வெளியாட்கள் வந்து மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பான தகவலை அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், ’ரெவெரி’ என்று அழைக்கப்படும் மூன்று நாள் நீடித்த விழாவின் கடைசி நாளான வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் சில ஆண்கள், அடையாள அட்டை இல்லாமல் வளாகத்திற்குள் நுழையத் தொடங்கினர்.

அதில் போதையில் இருந்த நடுத்தர வயதுடைய ஆண் ஒருவர் எங்களை பாலியல் ரீதியாகக் கட்டாயப்படுத்தினார். மேலும் பல விதமான பாலியல் சீண்டல்களிலும் அங்கு வந்தவர்கள் ஈடுபட்டனர் என்று கூறிப்பிட்டிருந்தார். 

மற்றொரு மாணவி வெளியிட்ட பதிவில், சில மாணவிகளை வலுக்கட்டாயமாக கல்லூரி ஓய்வறைகளில் அடைத்து வைத்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. 

இது தொடா்பாக தில்லி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவகாரம் தொடா்பாக கல்லூரி நிா்வாகத்திடம் இருந்து புகாா் கிடைக்கப்பெற்றது. அதன்படி, 452, 354, 509, 34 ஐபிசி ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளோம். மூத்த காவல் ஆய்வாளா் பிரதீபா ஷா்மா தலைமையில் விசாரணை நடத்தப்படும். தில்லி தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையா் கீதாஞ்சலி கண்டேல்வால் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக உண்மையைக் கண்டறியும் உயா்நிலைக் குழு அமைக்கப்படவுள்ளதாகவும்,  தில்லி காவல்துறை நடத்தும் விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என  அக்கல்லூரியின் முதல்வா் பிரோமிலா குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com