3-வது முறையாக ஆட்சி அமைக்கிறார் அரவிந்த் கேஜரிவால்

ஆட்சி அமைக்க 36 உறுப்பினர்கள் தேவையாக உள்ள நிலையில், ஆம் ஆத்மி அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று
3-வது முறையாக ஆட்சி அமைக்கிறார் அரவிந்த் கேஜரிவால்

ஆட்சி அமைக்க 36 உறுப்பினர்கள் தேவையாக உள்ள நிலையில், ஆம் ஆத்மி அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைக்கிறார் அரவிந்த் கேஜரிவால். 

எழுபது உறுப்பினா்கள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை பதிவான 62.59 சதவீத வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் ஆம் ஆத்மி 63 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜகவும் தற்போது மிகவும் பின்தங்கி 7 தொகுதிகளில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது. காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்பில் இல்லாம் தோல்வியை தழுவியுள்ளது. 

இதனிடையே, சீலாம்பூர் தொகுதி வேட்பாளர் அப்துல் ரஹமான் வெற்றியின் மூலம் வெற்றிக் கணக்கை தொடங்கிய ஆம் ஆத்மிக்கு தொடர்ந்து 3 தொகுதியில் வெற்றி அறிவிப்பும், 63 தொகுதிகளில் முன்னிலை அறிவிப்பும், அக்கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகளிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.  அவர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பாஜக வேட்பாளரை விட பின்தங்கி வந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 11வது சுற்று முடிவில் 656 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வந்தார். பின்னர் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  

கடந்த தேர்தலில் 67 தொகுதிகளில் வெற்றி கண்ட ஆம் ஆத்மி, தற்போது 63  தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதை அடுத்து அரவிந்த் கேஜரிவால் 3வது முறையாக முதல்வராவது உறுதியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com