Enable Javscript for better performance
சீமான் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    சீமான் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு

    By DIN  |   Published on : 13th February 2020 12:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    seeman supports telangana encounter


    சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

    02.10.2018 ஆம் தேதி காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்திய பின் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தமிழக அரசுக்கு எதிராகவும்,  வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கோட்டூர்புரம் காவல்துறை ஆய்வாளர் அஜூ குமார் அளித்த புகாரின் பேரில் “உள்நோக்கத்தோடு தவறான தகவலை பரப்புதல், இரு பிரிவினரிடையே அமைதியை சீர்குலைப்பது ஆகிய பிரிவுகளின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai