தீவனப் பற்றாக்குறையால் கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு

கோடை காலம் தொடங்குவதையொட்டி தீவனப் பற்றாக்குறையால் கடந்த வாரம் நடந்த சந்தையில் மாடுகள் வரத்து அதிகமாக
தீவனப் பற்றாக்குறையால் கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு


ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரம் தோறும் வியாழக்கிழமை கர வை மாடுகள்  சந்தையில் நடப்பது வழக்கம்.  இதன் போல் புதன்கிழமை வளர்ப்பு கன்றுகள்  சந்தையில் நடப்பது வழக்கம்.  இந்த சந்தைக்காக  கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா ஆந்திரா போன்ற மாநிலங்களிருந்து வியாபாரிகள் அதிக அளவு வருவார்கள்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நடந்த சந்தையில் மாடுகள் குறைந்த அளவே  வந்திருந்தன.  இதனால்  மாட்டு சந்தைகள் களையிழந்து காணப்பட்டது.

இந்நிலையில் கோடை காலம் தொடங்குவதையொட்டி தீவனப் பற்றாக்குறையால் கடந்த வாரம் நடந்த சந்தையில் மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. 

இதைப்போன்று  இன்று நடந்த சந்தையிலும் மாடுகள் வரத்து அதிகமாக இருப்பது.  250 எருமை மாடுகளும்,  150 பசு மாடுகளும், 175  வளர்ப்பு கன்றுகளும் வந்திருந்தன.

இன்று நடந்த சந்தையில் மகாராஷ்டிராவில் இருந்து அதிக அளவு வியாபாரிகள் வந்திருந்தனர் 85 சதவீதம் மாடுகள் விற்பனை ஆயின. இதேபோல் கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com