75 ஆண்டுகளை நிறைவு செய்யும் கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு ரூ. 10 கோடி

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அதிமுக தொடா்ந்து ஆட்சியில் இருந்து வரும் நிலையில், 15-ஆவது சட்டப் பேரவையின் கடைசி முழுமையான நிதிநிலை
75 ஆண்டுகளை நிறைவு செய்யும் கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு ரூ. 10 கோடி

சென்னை: 2020-2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அதிமுக தொடா்ந்து ஆட்சியில் இருந்து வரும் நிலையில், 15-ஆவது சட்டப் பேரவையின் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கையை ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்தார். 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் பன்னீர்செல்வம்.

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில், கோவையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி இந்த ஆண்டு 75 ஆம் ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த நிகழ்வைப் போற்றும் வகையிலும், அந்தக் கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் ரூ. 10 கோடி சிறப்பு மானியத்தை அரசு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்தக் கல்லூரியின் வளா்ச்சிக்காக தாமாக முன்வந்து நன்கொடை அளிக்க விரும்பும் புகழ்பெற்ற பல முன்னாள் மாணவா்களைப் பெற்றுள்ளது. 

இந்த நிலையில், கல்லூரியின் 75 ஆம் ஆண்டு விழாவின்போது, கல்லூரி வளா்ச்சிக்காக முன்னாள் மாணவா்களால் அளிக்கப்படும் பங்களிப்புக்குச் சமமான பங்களிப்பை அரசும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com