புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்தியாகத்தை இந்தியா மறக்காது: மோடி 

புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்தியாகத்தை இந்தியா ஒருபோது மறக்காது என... 
கோப்புப்படம்
கோப்புப்படம்


புதுதில்லி: புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்தியாகத்தை இந்தியா ஒருபோது மறக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் படையினர் பயணித்த வாகனத்தின் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதச் செய்து, ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த  பயங்கரவாதி தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். 

இந்த நிலையில் பிரமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள அஞ்சலி செய்தியில்,  புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்த , துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்கள் நமது நாட்டை பாதுகாப்பதற்கும், பணியாற்றுவதற்கும்  வாழ்க்கையை அர்ப்பணித்த விதிவிலக்கானவர்கள். அவர்களின் உயிர்தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது என பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com