ஆவின் கொள்முதல் அதிகரிப்பு: கூடுதலாக 6 பால் ஒன்றியங்கள் - ஓ.பன்னீர்செல்வம்

2020-2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ஆவின் நிறுவனத்தின் சராசரி பால் கொள்முதல் அதிகரித்துள்ளதாக
ஆவின் கொள்முதல் அதிகரிப்பு: கூடுதலாக 6 பால் ஒன்றியங்கள் - ஓ.பன்னீர்செல்வம்


சென்னை: 2020-2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ஆவின் நிறுவனத்தின் சராசரி பால் கொள்முதல் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சா் ஓ.பன்னீர்செல்வம் கூறினாா்.

நிதிநிலை அறிக்கையில், 2010-11 இல் நாள் ஒன்றுக்கு 20.67 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் நிறுவனத்தின் சராசரி பால் கொள்முதல் 2019-2020 இல் 33.96 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. ஆவின் நிறுவனத்தை வலுப்படுத்த கூடுதலாக 6 பால் ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்தாக கூறினார். 

மேலும், தனித்தியங்கும் சூரிய சக்தி பம்பு செட்டுகளை 70 சதவீத மானியத்துடன் வேளாண் பொறியியல் துறை அமைத்து தரும். வேளாண்மைக்கான மின் இணைப்பிற்கு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு தமிழக அரசின் பங்காக ரூ.208.74 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் ஓ.பன்னீர்செல்வம் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com