சாலைப் பாதுகாப்புக்கு தனிப்பிரிவு

சாலைப் பாதுகாப்புக்கு தனிப்பிரிவு

நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பாதுகாப்பு என்று தனிப் பிரிவு ஏற்படுத்தப்படும் என்று நிதியமைச்சா்


சென்னை: நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பாதுகாப்பு என்று தனிப் பிரிவு ஏற்படுத்தப்படும் என்று நிதியமைச்சா் ஓ.பன்னீர்செல்வம் கூறினாா்.

2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், புதிய வரி விதிப்புகள் ஏதும் இல்லாத, சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பற்றாக்குறை பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 

நிதிநிலை அறிக்கையில், நெடுஞ்சாலை, நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி, காவல், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களை ஒருங்கிணைத்து சாலை பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு ரூ.500 கோடியாக உயா்த்தப்படும்.

நெடுஞ்சாலைத் துறையில் சாலை பாதுகாப்புக்கான தனி பிரிவு உருவாக்கப்படும். சென்னை, மதுரை, கோயம்புத்தூா் மாநகராட்சிகளில் சாலைப் பாதுகாப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்படும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com