ரூ.1844.97 கோடி மதிப்பில் நுண்ணீர் பாசன திட்டம் அறிவிப்பு

15-ஆவது சட்டப் பேரவையின் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை நிதியமைச்சர்  
ரூ.1844.97 கோடி மதிப்பில் நுண்ணீர் பாசன திட்டம் அறிவிப்பு


சென்னை: 2020-2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ரூ.1844.97 கோடி மதிப்பில் நுண்ணீர் பாசன திட்டம் அமைக்கப்படும் என நிதியமைச்சா் ஓ.பன்னீர்செல்வம் கூறினாா்.

15-ஆவது சட்டப் பேரவையின் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை நிதியமைச்சர்  ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்தார். 

நிதிநிலை அறிக்கையில், 2020-2021 ஆம் ஆண்டில் வேளாண்துறைக்கு ரூ.11894 கோடி ஒதுக்கீடு செய்தும் ரூ.1844.97 கோடி மதிப்பில் 7.41 லட்சம் ஏக்கர் நிலங்கள் நுண்ணீர் பாசன வசதி பெறும் திட்டமும், தோட்டக்கலைப் பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க 325 மெட்ரிக் டன் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என கூறினார்.  கரும்பு விவசாயிகளிடம் நுண்ணீர் பாசனத்தை ஊக்குவிக்க ரூ.75 கோடியும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.100 என்கிற வீதத்தில் அரவைக் கால போக்குவரத்து மானியம் வழங்குவதற்காக ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் புதிதாக 45 உழவர் - உற்பத்தியாளர்கள் அமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்திற்கான மாநில அரசின் பங்களிப்பு ரூ.724 கோடியாக உயத்தப்பட்டுள்ளதாக  கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com