ரூ.50 கோடியில் ஒருங்கிணைந்த உழவர் விற்பனை மைய வளாகம்

2020-2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ரூ.50 கோடியில் ஒருங்கிணைந்த உழவர் விற்பனை மைய வளாகம் அமைக்கப்படும்
ரூ.50 கோடியில் ஒருங்கிணைந்த உழவர் விற்பனை மைய வளாகம்

 
சென்னை: 2020-2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ரூ.50 கோடியில் ஒருங்கிணைந்த உழவர் விற்பனை மைய வளாகம் அமைக்கப்படும் என நிதியமைச்சா் ஓ.பன்னீர்செல்வம் கூறினாா்.

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அதிமுக தொடா்ந்து ஆட்சியில் இருந்து வரும் நிலையில், 15-ஆவது சட்டப் பேரவையின் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கையை ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்தார். 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் பன்னீர்செல்வம்.

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில், திருவண்ணாமலை, தருமபுரி, மதுரை, திருச்சி, நெல்லை மாவட்டங்களில் ரூ.50 கோடியில் ஒருங்கிணைந்த உழவர் விற்பனை மைய வளாகங்கள் நிறுவப்படும் என்றார். 
மேலும், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் ரூ.70 கோடியில் உணவு பூங்காக்களும் நிறுவப்படும் என கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com