Enable Javscript for better performance
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அதிரடி சீர்திருத்தங்கள் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அதிரடி சீர்திருத்தங்கள் அறிவிப்பு

    By DIN  |   Published on : 15th February 2020 10:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tnpsc


    சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுகலில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 

    குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளில் நடந்த முறைகேடுகளை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் முறைகேடுகளில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் புதிய புதிய முறைகேடு தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

    இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதில், குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இருநிலை தேர்வுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

    அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும். காலை 10 மணிக்கும் நடைபெறும் தேர்வுக்கு தேர்வர்கள் காலை 9 மணிக்கே தேர்வுக் கூடங்களுக்கு வருதைத் தர வேண்டும். தேர்வு எழுதுபவர்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய, விதிமுறைகளை விளக்க முன்பே வரவேண்டும் என்ற தெரிவித்துள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai